astro revathy, stellar astrologer revathy, astrologer revathy books, aishwaryam jothida nilayam, stellar astrologer, sellar astrology, tamil stellar astrologer
முகப்பு ஜோதிடரை பற்றி சேவைகள் புத்தகங்கள் தொடர்புக்கு
 

இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம் !!

ஜோதிடம் என்பது நமது எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் அற்புதமான விஷயம். பழம்பெரும் பாரம்பரியம் கொண்டது இந்திய ஜோதிட சாஸ்திரம். அனைத்து காலத்திலும் ஜோதிடத்தின் தேவை இருந்து கொண்டு தான் உள்ளது. செயற்கை கோள்களை கொண்டு கிரகங்களை நாம் தற்போது தான் கண்டறிந்து பேசுகிறோம், ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் கிரகங்களை கொண்டு ஜோதிடம் கணித்து பலன்களை தந்துள்ளனர். "ஜோதிடம் பொய்க்காது" என்பது முன்னோர் வாக்கு

அத்தகைய ஜோதிடம் பழைய கால வாழ்க்கைக்கு ஏற்ப சில வரையறைகளை கொண்டிருந்தது. அந்த வகையில் ஜோதிடத்திற்கும் சில பரிணாம வளர்ச்சி தேவைப்பட்டது. திருமணத்திற்கு பதினாறு பொருத்தங்கள் பார்த்த காலம் மாறி, தற்போது பத்து பொருத்தம் என்றும், அதிலும் சில முக்கிய பொருத்தங்கள் மட்டும் இருந்தால் போதும் என்று தான் தற்போது பொருத்தம் பார்க்கபடுகிறது. எனவே இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் ஜோதிடமும் அதன் காரகங்களும் வளர்ந்து கொண்டும், மாற்றங்கள் அடைந்தும் செல்கிறது. பாரம்பரிய ஜோதிட முறையில் ராசி, நட்சத்திரம், லக்னம் போன்றவற்றை மட்டும் கொண்டு தோராயமான பலன்களை மட்டுமே அறிந்த வேளையில், ஒவ்வொரு நிமிட இடைவெளியில் பிறந்த ஜாதகங்களை வேறுபடுத்தி கட்ட முடியும் என்பதை மறைந்த ஜோதிட மாமேதை திரு.K.S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கண்டறிந்தார். ஒரு கிரகம், தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரம் வாயிலாக தான் பலன்களை தரும் என்பதை கண்டறிந்து ஜோதிடத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். அவரின் பாதையில் சென்னையை சேர்ந்த ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்கள் உப நட்சத்திர கோட்பாடை மேம்படுத்தி பல ஆய்வுகள் செய்து சார ஜோதிட முறையை வளர்த்து வருகிறார். அத்தகைய உயர்கணித சார ஜோதிட முறையை கொண்டே நமது இணையத்தளத்தில் ஜோதிட சேவைகள் வழங்கபடுகிறது

இந்த இணையதளத்தின் வாயிலாக தங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு ஜோதிட ரீதியில் தீர்வு காணவும். திருமண பொருத்தம், வாஸ்து, எண்கணிதம் முதலான அனைத்து ஜோதிட சேவைகளும் வழங்குகிறோம். ஜோதிடம் கற்பதற்க்கும், சார ஜோதிட புத்தகங்கள் பெறவும் தொடர்பு கொள்ளவும்.

 

Quick Contact

"Jothida Acharya" N.Revathy
No: 375/3, Ganga-Kaveri Flats,
19th Main Road, Anna nagar(West),
Chennai - 600 040.

Mobile: +91 805604 6588
E-Mail: astrorevathy@gmail.com
Website: www.stellarastrology.com

Consultation by
                   Appoinment only

 
 
 
முகப்பு ஜோதிடரை பற்றி சேவைகள் புத்தகங்கள் புகைப்படங்கள் தொடர்புக்கு
இணையதள வடிவமைப்பு - Blue Beez Mediaa
Free Web Counter
Free Web Counter
© www.stellarastrologer.com 2017